‘ஜெயம்’ ரவி படத்திற்கு கமல் பட டைட்டில்!

‘ஜெயம்’ ரவி படத்திற்கு கமல் பட டைட்டில்!

செய்திகள் 16-Jul-2015 10:17 AM IST VRC கருத்துக்கள்

சுராஜ் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி முதலானோர் நடித்து வந்த ‘அப்பா டக்கர்’ படம் இப்போது ‘சகலகலாவல்லவன் –அப்பா டக்கர்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன், அம்பிகா நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘சகலகலா வல்லவன்’. ஏ.வி.எம்.தயாரித்த இப்படத்தின் பெயரை இப்போது ‘ஜெயம்’ ரவி நடிக்கும் படத்திற்கு சூட்டியிருக்கிறார்கள். பழைய வெற்றிப் படங்களின் டைட்டிலை மீண்டும் வைப்பது கோலிவுட்டில் இப்போது வழக்கமாகி விட்டது.

‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;