‘கோ-2’ என்ற தலைப்புக்கான காரணம்?

‘கோ-2’ என்ற தலைப்புக்கான காரணம்?

செய்திகள் 15-Jul-2015 3:51 PM IST VRC கருத்துக்கள்

பாபி சிம்ஹா, கோ-2 பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, பாலா சரவணன் ஆகியோரது நடிப்பில் புதுமுக இயக்குனர் சரத் இயக்கி வரும் பொலிடிக்கல் த்ரில்லர் படம் ’கோ-2’. இயக்குனர்கள் விஷ்ணுவர்தன், சக்ரி டோலேட்டி ஆகியோருடன் பணிபுரிந்தவர் இயக்குனர் சரத். கோ-2 படம் குறித்து இயக்குனர் சரத் கூறும்போது,

“படம் இயக்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் இப்பொழுது இருக்கும் ட்ரெண்டிலிருந்து மாறுப்பட்ட ஒரு படம் எடுக்க எண்ணினேன். ஒரு பொலிடிக்கல் சப்ஜெக்ட் சரியாக இருக்கும் என தயாரிப்பு தரப்பில் இருந்தும் கருதப்பட்டதால் இந்த கதையை படமாக்க முடிவு செய்தோம். ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றிக் கண்ட ஒரு பொலிடிக்கல் த்ரில்லர் ‘கோ’ என்பதால் அதன் அடிப்படையில் ‘கோ-2’ என டைட்டில் வைத்தோம். ஆனால் இப்படம் ‘கோ’ படத்தின் தொடர்ச்சி கிடையாது. எனினும் ‘கோ’வில் இருந்த அத்தனை அம்சங்களும் இப்பட்த்திலும் இருக்கும். ‘கோ-2’ என்ற தலைப்பு எனக்கு அதிகபடியான பொறுப்பை அளித்திருக்கிறது.

‘RS Infotainment’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த நாள் முதல் தயாரிப்பாளர் படப்பிடிப்புக்கு தேவையான அனைத்தையும் உடனுக்கு உடன் கிடைக்க செய்தார். இப்படத்தின் மூலம் லியோன் ஜேம்ஸ் என்ற புதிய இசையமைப்பாளரை அறிமுகபடுத்துகிறோம். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் அரசியல் வாழ்க்கையின் நிழல் உலக விஷயங்களை கோடிட்டு காட்டும் படமே ‘கோ-2’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;