‘என்னை பிரியாதே’ – காதல், நட்பு எது வலிமையானது?

‘என்னை பிரியாதே’ – காதல், நட்பு எது வலிமையானது?

செய்திகள் 15-Jul-2015 12:59 PM IST VRC கருத்துக்கள்

‘அம்மு சினி ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் கோவை பி.நேருஜி தயரிக்கும் படம் ‘என்னை பிரியாதே’. கோவையைச் சுற்றி படப்பிடிப்பு நடந்துள்ள இப்படத்தில் புதுமுகங்கள் ரத்தன மௌலி, அமர், அதிரவன், ஷாம்லி, ரம்யா, பிரியங்கா ஆகியோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனத்துடன் இரண்டு பாடலகளையும் எழுதி இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குனர் பொன் மணிகண்டன். படம் குறித்து இயக்குனர் பொன் மணிகண்டன் கூறும்போது,
‘‘கிஷோரும் கீர்த்தியும் ஒரே கல்லூரியில் படிக்கும் நண்பர்கள். அதே கல்லூரியில் மாலினியும் படிக்கிறார். கிஷோரும், மாலினியும் காதலர்கள். அதே சமயம் கீர்த்தியும் கிஷோரை காதலிக்கிறார். கிஷோரை அடைய கீர்த்தி பல வழிகளில் முயற்சி செய்கிறார். கிஷோரிடமிருந்து மாலினியை பிரிக்க சூழ்ச்சி செய்கிறாள். மூவருக்குள் நடக்கும் போராட்டம் தான் படத்தின் கதைக்களம். இதில் நட்பு வலிமையானதா? இல்லை, காதல் வலிமையானதா என்ற கேள்விக்கான பதிலும் கிடைக்கும்! இப்படத்தில் புகை பிடிப்பது மாதிரியான காட்சிகள், மது அருந்துவது மாதிரியான காட்சிகளை காட்டாமல் சமூக பொறுப்புடன் அனைவரும் பார்க்கக் கூடிய படமாக இயக்கியிருக்கிறேன்’’ என்றார்.

‘முக்குலத்தோர் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் விரைவில் தமிழகமெங்கும் வெளியிட இருக்கும் இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் ஏ.எல்.எஸ்.வேலன் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பை ஆர்.டி.அண்ணாதுரை கவனித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;