’சைமா’வில் வெல்லப்போவது யார் யார்?

’சைமா’வில் வெல்லப்போவது யார் யார்?

செய்திகள் 15-Jul-2015 11:18 AM IST VRC கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது ‘SIIMA’ (SOUTH INDIAN INTERNATIONAL MOVIE AWARDS) என்ற அமைப்பு! கடந்த மூன்று ஆண்டுகளாக துபாய், ஷார்ஜா, கோலால்மபூர் ஆகிய இடங்களில் நடந்த விருது வழங்கும் விழாவை தொடர்ந்து இந்த வருடம் துபாயில் நடக்க இருக்கிறது ‘சைமா’ விருது வழங்கும் விழா! அடுத்த மாதம் 6, 7 தேதிகளில் நடக்க இருக்கும் இந்த விருது வழங்கும் விழாவில் நடிகைகள் அமலாபால், டாப்சி, நடிகர் சிலம்பரசன், இசை அமைப்பாளர் அனிருத் உட்பட 20 தென்னிந்திய கலைஞர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை வழங்கவிருக்கின்றனர்.

இவ்விழாவில் நாமினேஷன் அடிப்படையில் விருதுக்குரிய கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்குவது வழக்கம். தமிழ் சினிமா பிரிவில் இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான நாமினேஷனில் விஜய் (கத்தி), தனுஷ் (வேலையில்லா பட்டதாரி), கார்த்தி (மெட்ராஸ்), சித்தார்த் (ஜிகர்தண்டா), விஜய்சேதுபதி (பண்ணையாரும் பத்மினியும்), சிறந்த நடிகைக்கான நாமினேஷனில் ஹன்சிகா மோத்வானி (அரண்மனை), அமலா பால் (வேலையில்லா பட்டதாரி), சமந்தா (கத்தி), லக்‌ஷ்மி மேனன் (ஜிகர்தண்டா), வேதிகா (காவியத்தலைவன்), சிறந்த இயக்குனர் விருதுக்கான நாமினேஷனில் பா.ரஞ்சித் (மெட்ராஸ்), ஏ.ஆர்.முருகதாஸ் (கத்தி), விஜய் (சைவம்), விஜய் மில்டன் (கோலிசோடா), கார்த்திக் சுப்பராஜ் (ஜிகர்தண்டா) ஆகியோர் இருக்கிறார்கள். சிறந்த படத்திற்கான நாமினேஷனில் கோலிசோடா, ஜிகர்தண்டா, வேலையில்லா பட்டதாரி, மெட்ராஸ், கத்தி ஆகிய படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு மொழியிலும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசை அமைப்பாளர் என 19 பிரிவுகளில் விருதுகள் வழங்க இருக்கிறார்கள். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இவ்விழா சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராணா, இசை அமைப்பாளர் அனிருத், நடிகைகள் அமலா பால், டாப்சி, ஆகியோருடன் இந்நிகழ்ச்சியின் முக்கிய ஸ்பான்சரான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி சுபிஜித் சிங்கும் கலந்துகொண்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;