ராம்சரண் தேஜாவுடன் மோதும் அருண் விஜய்!

ராம்சரண் தேஜாவுடன் மோதும் அருண் விஜய்!

செய்திகள் 14-Jul-2015 12:47 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில், ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துடன் வில்லனாக நடித்த அருண் விஜய் சமீபத்தில் புனித் ராஜ்குமாருடன் கன்னட படமொன்றில் நடித்தார். இதனை தொடர்ந்து அருண் விஜய்க்கு இப்போது தெலுங்கு படமொன்றில் வில்லனாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான சீனு வைட்லா இயக்கும் இப்படத்தில் ராம்சரண் தேஜா ஹீரோவாக நடிக்கிறார். இதில் ராம்சரண் தேஜாவுடன் வில்லனாக மோதவிருக்கிறார் அருண் விஜய். இப்படத்தில் அருண் விஜய்க்கு மல்டி மில்லியனர் வேடமாம்! இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. அருண் விஜய் நடித்த தமிழ் படமான ‘வா’ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் கன்னடம், தெலுங்கு என கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி மற்ற மொழிப் படங்களிலும் நடிக்க இப்போது ஆர்வம் காட்டி வருகிறார் அருண் விஜய்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;