இறுதிகட்டத்தில் ‘பாம்பு சட்டை’

இறுதிகட்டத்தில் ‘பாம்பு சட்டை’

செய்திகள் 14-Jul-2015 11:23 AM IST VRC கருத்துக்கள்

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோரின் ‘மேஜிக் ஃப்ரேம்ஸ்’ நிறுவனமும்,ம் இயக்குனர், நடிகர் மனோபாலாவின் ‘மனோபாலா பிக்சர் ஹவுஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ஆடம் தாசன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷுடன் ‘தாமிரபரணி’ படப் புகழ் முக்தா பானு மற்றும் கே.ராஜன், சார்லி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஆர்.வி.உதயகுமார், சரவண சுப்பையா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படதின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கு அஜேஷ் அசோக் இசை அமைக்க, கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;