ஹேப்பி பர்த்டே சரத்குமார்!

ஹேப்பி பர்த்டே  சரத்குமார்!

செய்திகள் 14-Jul-2015 11:06 AM IST VRC கருத்துக்கள்

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் சங்க தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என பல முகங்களுடன் சினிமாவிலும், பொது வாழ்க்கையிலும் நற்பணிகளை செய்து வருபவர் சரத்குமார். ஏராளமான வெற்றி படங்களை வழங்கிய இவர் சினிமாவும், சினிமாவில் இருக்கும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருவதோடு, ஒரு அரசியல் கட்சியையும் திறம்பட நடத்தி வருபவர். ஏராளமான மக்களின் மனதில் நீங்கா ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு சினிமாவிலும், சமூக பணிகளிலும் தன்னை அர்பணித்துக் கொண்டு செயலாற்றி வரும் சரத்குமார் பிறந்த நாள் இன்று! லட்சகணக்கான ரசிகர்கள், மற்றும் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் சரத்குமாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;