‘தல 56’ படத்தின் புதிய தகவல்கள்!

‘தல 56’ படத்தின் புதிய தகவல்கள்!

செய்திகள் 14-Jul-2015 10:43 AM IST VRC கருத்துக்கள்

‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது இத்தாலி நாட்டில் நடந்து வருகிறது. அங்கு நடைபெற்று வரும் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் சென்னை திரும்பவுள்ளனர். இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், படத்தின் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளார்கள். நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு அக்டோபர் மாதம் வரவிருக்கும் ஆயுத பூஜையையொட்டி நடைபெறும் என்று கூறப்படுகிறது. அனிருத் இசை அமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, முதலானோர் நடித்து வருகின்றனர். ‘வீரம்’ படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் சிவா இணைந்துள்ள இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

S3 - வை வை வை வைஃபை சாங் டீசர்


;