லட்சுமி ராமகிருஷ்ணனை கண்கலங்க வைத்த இறுதி ஊர்வலம்!

லட்சுமி ராமகிருஷ்ணனை கண்கலங்க வைத்த இறுதி ஊர்வலம்!

செய்திகள் 13-Jul-2015 11:32 AM IST Top 10 கருத்துக்கள்

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படங்களை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் படம் ‘அம்மணி’. 82 வயது சுப்புலட்சுமி பாட்டி முக்கிய கேரக்டரில் நடிக்கும் இப்படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் இறுதி ஊர்வலம் படம் பிடிக்கப்பட்டது. இக்காட்சியில் இறந்தவராக லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்து, இயக்கவும் செய்துள்ளார். இந்த காட்சியில் நடித்த அனுபவம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது,

“இறுதி ஊர்வல காட்சியில் நடிக்கும்போது என் மனம் மிகவும் கனத்திருந்தது. இது ஒரு இறுதி அஞ்சலி காட்சி என்பது மட்டுமல்லாமல் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு என்பது ஒரு முக்கிய காரணமாக இருந்தது. கடைசி நாள் படப்பிடிப்புக்கு என்னுடன் என் இளைய மகளும் வந்திருந்தார். அவள் அந்த காட்சியில் நான் நடித்ததை பார்த்து சற்று வருத்தப்பட்டார். முதல் நாள் படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் தான் இறுதிநாள் படப்பிடிப்பும் நடந்தது. ‘அம்மணி’ படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அம்மணி - டிரைலர்


;