இறுதிகட்டத்தில் ‘மாலை நேரத்து மயக்கம்’

இறுதிகட்டத்தில் ‘மாலை நேரத்து மயக்கம்’

செய்திகள் 13-Jul-2015 11:09 AM IST VRC கருத்துக்கள்

செல்வராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி வரும் படம் ‘மாலை நேரத்து மயக்கம்’. செல்வராகவனின் நெருங்கிய நண்பரும், செல்வராகவன் இயக்கிய படங்கள் உட்பட தமிழ், தெலுங்கு மொழிகளில் 100 படங்களுக்கும் மேல் படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ள கோலா பாஸ்கர் தனது ‘பீப் டோன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

கோலா பாஸ்கர் முதன் முதலாக தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகம் பாலகிருஷணன் கதாநாயகனாக நடிக்க, கதநாயகியாக வாமிகா என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் ஆகியோரும் நடிக்கிறார்கள். செல்வராகவனிடம் உதவியாளராக பணிபுரிந்த அனுபவத்துடன் இப்படத்தை இயக்குகிறார் கீதாஞ்சலி செல்வராகவன்! இந்த படத்திற்கு உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் கம்பெனிக்கு இசை ஆல்பங்கள் தயாரித்த அம்ரித் இசை அமைக்கிறார்.

இப்படம் செல்வராகவன் இயக்கிய, ‘துள்ளுவதோ இளமை’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘காதல் கொண்டேன்’ பட வரிசையில் ஜனரஞ்சக காதல் கதையாக உருவாகி வருகிறதாம். ஏற்கெனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படத்தில் நடித்து வரும் வாமிகா ஹிந்தியில் பல படங்களில் நடித்து வருவதால் அவரது கால்ஷீட் கிடைக்க கொஞ்சம் காலதாமதம் ஆனதால் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில மாதங்கள் தள்ளிப் போனது. இப்போது அவரது கால்ஷீட் கிடைத்து படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் விரைவில் முடிவுற இருப்பதோடு, இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் விரைவில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூர்யா 36 படத்துவக்கம் - வீடியோ


;