ஹரிகுமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம்!

ஹரிகுமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம்!

செய்திகள் 13-Jul-2015 10:31 AM IST Top 10 கருத்துக்கள்

‘தூத்துக்குடி’, ‘மதுரை சம்பவம்’, ‘திருத்தம்’, ‘போடி நாயக்கனூர் கணேசன்’ ஆகிய படங்களில் நடித்தவர் ஹரிகுமார். இவர் இப்போது ‘காதல் அகதி’ என்ற படத்தில் நடித்து வருவதோடு அடுத்து ‘மதுரை மணிக்குறவன்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்பட்த்தில் போலீஸ் அதிகாரி, மணிக்குறவன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
இப்படத்தை ‘காளையப்பா பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்க, கதாநாயகியாக மாதவி லதா நடிக்கிறார். இவர் தெலுங்கில் பிரபலமான நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் கோட்டா சீனிவாசராவ், ‘பருத்திவீரன்’ சரவணன், கே.ஜி.காளையப்பன் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

மதுரை மண்ணில் வாழ்ந்து மறைந்த மாமனிதன் மதுரை மணிக்குறவனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்துடன் கற்பனையை கலந்த திரைக்கதையாம் இப்படம். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.ராஜரிஷி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;