‘பாஹுபலி’யில் புதிய காட்சிகள் இணைப்பு!

‘பாஹுபலி’யில் புதிய காட்சிகள் இணைப்பு!

செய்திகள் 13-Jul-2015 10:13 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பாஹுபலி’. இப்படம் வெளியான முதல் நாளே வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு (2016) வெளியாகவிருக்கிறது. முதல் பாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கிளைமேக்ஸ் காட்சி சட்டென்று முடிந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது என்பது பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது! இதை ‘பாஹுபலி’ படக்குழுவினர் உணர்ந்திருக்கிறது போலும்! இதனால் இப்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பாஹுபலி’யின் கிளைமேக்ஸில் மேலும் சில காட்சிகளை இணைத்துள்ளனர். இந்த காட்சிகள் அடுத்த பாகத்தில் வரும் முக்கியமான காட்சிகளின் முன்னோட்டமாக வருவது போல் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிகளில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;