முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘பாகுபலி’க்கு புகழாரம்!

முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘பாகுபலி’க்கு புகழாரம்!

செய்திகள் 13-Jul-2015 9:27 AM IST Chandru கருத்துக்கள்

இந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படம். கடந்த வெள்ளிக்கிழமை உலகளவில் 4000 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு அனைத்துத்தர ரசிகர்களிடமிருந்தும் ஏகோபித்த வரவேற்பு கிடைத் துள்ளது. இப்படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பின் காரணமாக முதல் வாரத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவிலேயே விற்று சாதனை படைத்தது. முதல் நாளில் மட்டுமே இப்படம் உலகளவில் 50 கோடி குவித்திருப்பதாகவும், இரண்டு நாட்களிலேயே 100 கோடியைத் தாண்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஒருபுறம் வசூல் மழை என்றால், இன்னொருபுறம் பாராட்டுமழையும் குவிந்து கொண்டிருக்கிறது பாகுபலி படத்திற்கு. அதில் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் புகழாரம். ‘பாகுபலி’ படம் குறித்து ட்வீட் செய்துள்ள சந்திரபாபு நாயுடு, ‘‘தலைசிறந்த படமான ‘பாகுபலி’யை உருவாக்கியதற்காக எஸ்.எஸ்.ராஜமௌலியையும் அவரது குழுவையும் மனதார பாராட்டுகிறேன். உலகளவில் தெலுங்கு சினிமாவை கவனம் பெறச் செய்திருக்கிறார் ராஜமௌலி!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் ஆணையிட்டால் - டிரைலர்


;