விஜய், அட்லி படத்தில் இன்னொரு நாயகி!

விஜய், அட்லி படத்தில் இன்னொரு நாயகி!

செய்திகள் 11-Jul-2015 12:38 PM IST VRC கருத்துக்கள்

‘புலி’ படத்தை தொடர்ந்து தனது 59 ஆவது படமாக, அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சூடு பிடித்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க, இவர்களுடன் மற்றுமொரு ஹீரோயினும் நடிக்கிறார். அவர் வேறு யாருமல்ல, ‘காதலில் விழுந்தேன்’ படப் புகழ் சுனைனா தான்! ஆனால் சுனைனாவுக்கு இப்படத்தில் கேமியோ கேரக்டராம்! இந்நிலையில் சுனைனா சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஷூட்டிங்கும் முடிந்து விட்டது என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;