‘பாஹுபலி’ முதல் நாள் வசூல்!

‘பாஹுபலி’ முதல் நாள் வசூல்!

செய்திகள் 11-Jul-2015 12:20 PM IST VRC கருத்துக்கள்

இந்திய சினிமாவிலேயே அதிக பெருட்செலவில் தயாரான படம் என்ற பெருமையுடன் நேற்று உலகம முழுக்க வெளியான படம் ‘பாஹுபலி’. ராஜமௌலி இயக்கிய இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 3000 தியேட்டர்களில் இப்படம் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுக்க வெளியாகியுள்ள இப்படம் முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசூலை பார்க்கும்போது இப்படத்தின் முதல் மூன்று நாள் வசூல் கண்டிப்பாக 100 கோடியை தாண்டும் என்கின்றனர் திரையுலக வல்லுனர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;