‘புலி’க்கு எதிராக சதி! பாய்கிறது வழக்கு!

‘புலி’க்கு எதிராக சதி! பாய்கிறது வழக்கு!

செய்திகள் 11-Jul-2015 10:31 AM IST VRC கருத்துக்கள்

விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் ஸ்டில்ஸ் திருட்டுத்தனமாக அடிக்கடி வெளியாகி வருகிறது. இது சம்பந்தமாக படத்தின் தயாரிப்பாளர்களான பி.டி.செல்வகுமாரும், ஷிபு தமீனும் சென்னை சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள விவரம் வருமாறு:

‘எங்களது ‘புலி’ திரைப்படத்திற்கு விளம்பர டிசைனராக சென்னையை சேர்ந்த திரு.டியுனிஜான், ‘M/s 24 AM’ என்ற நிறுவனத்திற்கு கொடுத்து இருந்தோம். அதற்காக புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு (Hard Disk) கொடுத்திருந்தோம். வேலையை துவங்கும்பொது அவரது காலதாமதம், நம் சிந்தனைக்கு ஒத்துபோகாமை போன்ற காணங்களால் அவரிடம் இருந்து விலகி வேறு ஒருவரிடம் சென்றுவிட்டோம். இந்த சூழ்நிலையில் அவரிடம் கொடுத்திருந்த புகைப்படங்கள் அவர் எங்களுக்கு செய்து காட்டிய டிசைன் இவைகள் எல்லாம் இணைய தளங்களில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இது, எங்களுக்கு தெரியாமல் எங்கள் அனுமதியின்றி திருட்டுத்தனமாக வெளிவந்து எங்களை வேதனைப்படுத்துவதுடன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இத்திரைப்படத்தின் புகைப்படங்கள் திருட்டுத்தனமாக வெளிவருவதால் நாங்களும், எங்கள் திரைப்படமும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதை பற்றி திரு.டியுனிஜானிடம் கேட்கும்போது என் நிறுவனத்தில் என்னுடன் என் உதவியாளர்கள் சில பேர் உள்ளனர். அவர்களில் யாராவது இதை எனக்கு தெரியாமல் செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை என்று கூறினார். இதனால் இதனை யார் செய்கிறார் என்று கண்டுபிடித்து, அதை தடுத்தி நிறுத்தி எங்கள் தொழிலை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலிமுருகன் - டிரைலர்


;