அனிருத்துடன் டூயட் பாடும் எமி ஜாக்‌சன்!

அனிருத்துடன் டூயட் பாடும் எமி ஜாக்‌சன்!

செய்திகள் 10-Jul-2015 11:36 AM IST VRC கருத்துக்கள்

‘ரெபில் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் பூபதி, ரத்தேஷ் வேலு ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஆக்கோ’. கீதன் பிரிட்டோ, துலிகா குப்தா ஜோடியாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷாம் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்திற்காக அனிருத் இசை அமைத்து பாடிய, ‘எனக்கென யாரும் இல்லையே...’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. காதலியின் அன்புக்காக ஏங்கும் ஒரு இளைஞனின் ஏக்கத்தை பற்றிய பாடல் இது. இந்த பாடலில் இன்று இளைஞர்கள் பெரிதும் விரும்பும் அனிருத் மற்றும் எமி ஜாக்சன் இருவரையும் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் ஷாம். ஏற்கெனவே பிரபலமடைந்துள்ள இப்பாடலில் அனிருத், எமி ஜாக்சன் இணைந்து நடிப்பது ‘ஆக்கோ’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் என்கிறார் இயக்குனர் ஷாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;