சிம்புவுக்கு எதிராக சதி! - டி.ஆர்.குமுறல்

சிம்புவுக்கு எதிராக சதி! - டி.ஆர்.குமுறல்

செய்திகள் 9-Jul-2015 1:02 PM IST VRC கருத்துக்கள்

‘நிக் ஆர்ட்ஸ்’ சக்ரவர்த்தி தயாரிப்பில் சிம்பு நடித்திருக்கும் ‘வாலு’ படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை டி.ராஜேந்தரின் ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தை இம்மாதம் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்து, கடந்த சில நாட்களாக விளம்பரங்களும் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை வெளியிட தடை கோரி ‘மேஜிக் ரேஸ்’ என்ற நிறுவனம் நேற்று முன் தினம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு சம்பந்தமான தீர்ப்பை வருகிற 13-ஆம் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தகவல் ‘வாலு’ படத்திற்கு இடைக்கால தடை என்பது போல இணைய தளங்களில் செய்தி பரவிவிட்டது. இது குறித்து விளக்கமளிக்க இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் டி.ராஜேந்தர். அப்போது அவர் பேசும்போது,

‘‘சிம்பு நடித்த ‘வாலு’ படத்தை தமிழகம் முழுவதும் ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ மூலம் வருகிற 17-ஆம் தேதி வெளியிட முடிவெடுத்து கடந்த சில நாட்களாக அந்து சம்பந்தமான விளம்பரங்களை செய்து வருகிறேன். அந்த விளம்பரங்களில் ‘நிக் ஆர்ட்ஸ்’ நிறுவன லோகோ மற்றும் ‘மேஜிக் ரேஸ்’ நிறுவன லோகா ஆகியவையும் இடம் பெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென்று ‘மேஜிக் ரேஸ்’ நிறுவனம் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. இது என்ன நியாயம்! இதுநாள் வரை இந்த பட வெளியீடு சம்பந்தமாக எந்த குறுக்கீடுகளும் செய்யாத ‘மேஜிக் ரேஸ்’ நிறுவனம் இப்போது திடீரென்று வழக்கு தொடர்ந்துள்ளதில் ஏதோ சதி இருப்பதாக கருதுகிறேன். சிம்பு நடித்த இந்த படம் வெளியாகக் கூடாது என்பதில் ஒரு கூட்டத்தினர் செயல்பட்டு வருவதாக நினைக்கிறேன். அவர்களது எண்ணம் நிறைவேறாது! இறைவனை நம்பும் எனக்கு வருகிற 13 ஆம் தேதி நல்ல தீர்ப்பு வரும். நீதிமன்றத்தை மதிப்பவன் நான்! நீதி மன்றம் வழங்கும் எந்த தீர்ப்பையும் ஏற்க நான் தயாராக உள்ளேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;