கமலுடன் மீண்டும் இணையும் ‘பாபநாசம்’ ஆஷா சரத்!

கமலுடன் மீண்டும் இணையும் ‘பாபநாசம்’ ஆஷா சரத்!

செய்திகள் 9-Jul-2015 12:28 PM IST Top 10 கருத்துக்கள்

கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தில் போலீஸ் ஐ.ஜி.யாக நடித்து அனைவரது பாராட்டுக்களையும் அள்ளிக் கொண்டிருப்பவர் ஆஷா சரத்! மலையாள ‘திருசியம்’ மற்றும் கன்னட ‘திருசியம்’ ஆகியவற்றிலும் இவர்தான் அந்த கேரக்டரை ஏற்று நடித்திருந்தார். ‘பாபநாசம்’ படத்தில் ஆஷா சரத்தின் சிறந்த நடிப்பாற்றலை பார்த்த கமல்ஹாசன், தனது அடுத்த படமான ‘தூங்காவனம்’ படத்தில் ஆஷா சரத்துக்கு தனது மனைவியாக நடிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். ‘பாபநாசம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆஷா சரத்துக்கு தமிழ் படங்களில் நடிக்க நிறைய அழைப்புகள் வருகிறதாம்! ஆனால் இப்போதைக்கு ‘தூங்காவனம்’ படத்தை மட்டும் தான் அவர் கமிட் செய்துள்ளார். இதனை ஆஷா சரத்தே நம்மிடம் தெரிவித்தார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;