அமர்க்களம், VIP வரிசையில் ஆர்யாவின் VSOP!

அமர்க்களம், VIP வரிசையில் ஆர்யாவின் VSOP!

செய்திகள் 9-Jul-2015 10:29 AM IST Chandru கருத்துக்கள்

இயக்குனர் எம்.ராஜேஷ், ஆர்யா, சந்தானம் என ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இதையே ‘கட்டிங்’காகச் சொன்னால் VSOP. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். வழக்கம்போல் நட்பு, காதல், காமெடி என அதே ராஜேஷ் ஃபார்முலாவில் உருவாகியிருக்கும் இப்படம் ஆர்யாவுக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

ஆம்.. ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் மூலம் 2005ல் தனது சினிமா பயணத்தைத் துவங்கிய ஆர்யாவுக்கு 25வது படமாக அமைந்திருக்கிறது இந்த ‘VSOP’. படப்பிடிப்பு வேலைகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் நாளை (ஜூலை 10) மாலை 6 மணி அளவில் வெளிவரவிருக்கிறது.

அஜித்துக்கு ஒரு ‘அமர்க்களம்’, தனுஷுக்கு ஒரு ‘வேலையில்லா பட்டதாரி’ போல் ஆர்யாவுக்கும் இந்த 25வது படமான ‘VSOP’ வெற்றிபெற வேண்டும் என அவரது ரசிகர்கள் பேராவலில் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;