‘செஞ்சுருவேன்...’ : ‘VIP’யை முந்திய மாரி!

‘செஞ்சுருவேன்...’ : ‘VIP’யை முந்திய மாரி!

செய்திகள் 8-Jul-2015 3:01 PM IST Chandru கருத்துக்கள்

அதற்கு முன்பு எத்தனையோ வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் தனுஷைப் பொறுத்தவரை அவரின் 25வது படமான ‘வேலையில்லா பட்டதாரி‘ படத்தின் வெற்றியே அவரது வாழ்நாளில் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. 2014ஆம் ஆண்டின் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி என ஏக மனதாக தேர்வான இப்படம் செய்த சாதனை ஒன்றை தற்போது தனுஷ் நடிப்பில் வரும் 17ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘மாரி’ படம் முறியடித்திருக்கிறது. அது என்ன தெரியுமா?

கடந்த வருடம் ஜூன் 17ஆம் தேதி ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் டிரைலர் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. தனுஷின் மிரட்டல் நடிப்பில் வெளிவந்த அந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. அப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய ஓபனிங்கிற்கு இந்த டிரைலரும் ஒரு காரணம் என்று தாராளமாக சொல்லலாம். ‘விஐபி’ டிரைலரை இந்த ஒரு வருட காலத்தில் இதுவரை 2,998,570 முறை கண்டுகளித்துள்ளார்கள் ரசிகர்கள்.

இந்த ஒரு வருட கால சாதனையை 2 வாரத்தில் முறியடித்திருக்கிறது தனுஷின் ‘மாரி’ டிரைலர். ஆம்... ஜூன் 25ஆம் தேதி யு டியூப்பில் வெளியான ‘மாரி’ டிரைலரை இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர். தனுஷ் படங்களின் டீஸர்/டிரைலரைப் பொறுத்தவரை இதுவே அதிகபட்ச எண்ணிக்கை. அதோடு முதல்முறையாக 30 லட்சம் என்ற மைல்கல்லையும் எட்டியிருக்கிறார் தனுஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;