மீண்டும் ‘காஞ்சிவரம்’ கூட்டணி!

மீண்டும் ‘காஞ்சிவரம்’ கூட்டணி!

செய்திகள் 8-Jul-2015 12:08 PM IST VRC கருத்துக்கள்

ப்ரியதர்சன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி முதலானோர் நடித்து 2008-ல் வெளியான படம் ‘காஞ்சிவரம்’. இந்த படம் பிரகாஷ் ராஜுக்கு சிறந்த நடிகருக்கான் தேசிய விருதை பெற்று தந்ததோடு இப்படம் சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றது. ‘காஞ்சிவரம்’ படத்தில் கூட்டணி அமைத்த ப்ரியதர்சன், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறது. ‘காஞ்சிவரம்’ படத்தில் பட்டுச் சேலை நெசவாளர்களின் வாழ்க்கையை சொன்ன ப்ரியதர்சன் அடுத்து இயக்கும் படத்தில் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோயான எய்ட்ஸ் குறித்த கதையை படமாக்குகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சில சமயங்களில் - டிரைலர்


;