ஜூலை13-ல் ‘மாயா’வின் தாலாட்டு!

ஜூலை13-ல் ‘மாயா’வின் தாலாட்டு!

செய்திகள் 8-Jul-2015 10:37 AM IST VRC கருத்துக்கள்

நயன்தாரா நாயகியாக நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘மாயா’. கடந்த மாதம் 18-ஆம் தேதி வெளியான இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து, இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அதை பார்த்துள்ளனர். ஹாரர் பட வரிசையில் வித்தியாசமான முறையில் உருவாகியிருக்கும் இப்படத்தை ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரான் யோஹான் இசை அமைத்துள்ளார். குட்டி ரேவதி, உமா தேவி பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வருகிற 13-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில், டி.எஸ்.சுரேஷ் எடிட்டிங்கில் உருவாகியிருக்கும் ‘மாயா’ படம் டால்ஃபி அட்மாஸ் ஒலிப்பதிவில் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தர காத்திருக்கிறது. விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிஸ்’ வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;