உதயநிதியுடன் கைகோர்க்கும் ராதாரவி!

உதயநிதியுடன் கைகோர்க்கும் ராதாரவி!

செய்திகள் 8-Jul-2015 10:11 AM IST Chandru கருத்துக்கள்

நடிகர் சங்க தேர்தல், கட்டிடம் சம்பந்தமான பிரச்சனைகள் என ஒருபுறம் ராதாரவிக்கு டென்ஷன் எகிறிக் கொண்டிருந்தாலும் இன்னொருபுறம் படங்களில் நடிப்பதையும் தங்கு தடையின்றி செய்து கொண்டுதான் இருக்கிறார். ‘பிசாசு’ படத்தில் பாசமுள்ள அப்பாவாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற நடிகர் ராதாரவி தற்போது உதயநிதியுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் ‘கெத்து’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் தனது அடுத்த படமாக, ஹிந்தியில் வெற்றிபெற்ற ‘Jolly LLB’ படத்தை ரீமேக் செய்து நடிக்கவிருக்கிறார். ‘என்றென்றும் புன்னகை’ அஹமது இப்படத்தை இயக்குகிறார். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தைத் தொடர்ந்து ஹன்சிகா மீண்டும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாகிறார்.

கோர்ட்டில் நடக்கும் காமெடிகளை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் நீதிபதி கேரக்டரில் ராதாரவி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;