‘‘ஜூலை 17 வர்றோம்...!’’ - ‘மாரி’ தனுஷ் உறுதி

‘‘ஜூலை 17 வர்றோம்...!’’ - ‘மாரி’ தனுஷ் உறுதி

செய்திகள் 8-Jul-2015 9:54 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பே சிம்புவின் ‘வாலு’வும், தனுஷின் ‘மாரி’யும் ஜூலை 17ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடைசி நேரத்தில் இந்த 2 படங்களுமே 17ஆம் தேதி திட்டமிட்டபடி வெளிவருமா என்ற சந்தேகங்கள் இணையதளங்களில் உலவி வந்தன.

பல தடைளுக்குப் பிறகு இந்த 17ஆம் தேதி உறுதியாக ‘வாலு’ வருகிறது என சிம்பு அறிவித்திருந்தாலும், கடைசி நேரம் வரை பாடல் ஒன்றிற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இதனால் திட்டமிட்டபடி அப்படம் வெளியாகுமா என்ற சந்தேகத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. எல்லாம் நல்லபடியாக முடிந்து ரிலீஸ் கன்பார்ம் என்ற நிலையில் நேற்று ‘வாலு’ படத்தின் மீது வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் முடிவு இன்று அல்லது நாளை வெளிவரும். இதன் பிறகு வாலு ரிலீஸ் உறுதி செய்யப்படும்.

அதேபோல் தனுஷின் ‘மாரி’ படம் 17ஆம் தேதி ரிலீஸ் இல்லை, 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. ஆனால், இதனை தனுஷ் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். ‘மாரி’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்த சந்தோஷத்தை ட்விட்டரில் பதிவு செய்திருக்கும் தனுஷ், ‘‘ஜூலை 17 வர்றோம்...!’’ என உறுதியாகக் கூறியிருக்கிறார். இதனால் ‘மாரி’ வருவது 100% உறுதியாகியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;