ரஜினி, அஜித்தை முந்திய ‘புலி’ விஜய்!

ரஜினி, அஜித்தை முந்திய ‘புலி’ விஜய்!

செய்திகள் 8-Jul-2015 8:57 AM IST Chandru கருத்துக்கள்

விஜய்யின் சினிமா கேரியரில் மிகப்பிரம்மாண்டமான பொருட்செலவில், வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகிவரும் ‘புலி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் எகிறிக் கொண்டே போகிறது. ஜூன் 21ஆம் தேதி வெளியிடப்பட்டு ‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் டீஸர் ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது. டீஸர் வெளியான முதல்நாளிலேயே 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதித்து, சமீபத்தில் 50 லட்சம் பார்வையாளர்கள் என்ற மைல்கல்லையும் எட்டியது.

தற்போது 18 நாட்களில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, ‘லிங்கா’ பட டீஸர், டிரைலர் சாதனைகளை முறியடித்திருக்கிறது ‘புலி’ டீஸர். இதுவரை ‘புலி’ டீஸரை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சங்களைத் தாண்டியிருக்கிறது. தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை ஷங்கரின் ‘ஐ’ பட டீஸர்/டிரைலருக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் பார்வையிடப்பட்ட டீஸர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது ‘புலி’.

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ டீஸரை 53 லட்சத்திற்கு மேற்பட்டோரும், ‘லிங்கா’ டிரைலரை 52 லட்சத்திற்கு மேற்பட்டோரும் இதுவரை கண்டுகளித்திருக்கின்றனர். இந்த இரண்டு சாதனைகளையும் முறியடித்திருக்கிறது ‘புலி’ டீஸர். ஒட்டுமொத்தமாக ஐ டீஸரை 1 கோடியே 11 லட்சம் பேரும், ஐ டிரைலரை 85 லட்சம் பேரும் கண்டுகளித்துள்ளதே அதிகபட்ச சாதனை. தற்போது ரஜினி, அஜித்தை முந்தி ‘புலி’ விஜய் 3ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

(டீஸர்/டிரைலர் ‘லைக்’ சாதனையில் ‘என்னை அறிந்தால்’ படமே முதல் 2 இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது).

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;