விஷாலை இயக்கும் ‘கொம்பன்’ இயக்குனர்

விஷாலை இயக்கும் ‘கொம்பன்’ இயக்குனர்

செய்திகள் 7-Jul-2015 4:01 PM IST VRC கருத்துக்கள்

‘கொம்பன்’ வெற்றிப் படத்தை இயக்கிய முத்தையா அடுத்து விஷால் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். பிரபல விநியோகஸ்தரும் ‘வெள்ளக்கார துரை’ படத்தை தயாரித்தவருமான ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ ஜி. அன்புச்செழியன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு இசை அமைக்க டி.இமானிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்! இதனை இயக்குனர் முத்தையாவே தெரிவித்தார். ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ வரிசையில் இப்படமும் நேட்டிவிட்டி, ஃபேமிலி சென்டிமென்ட் படமாக இருக்குமாம்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த ‘பாயும் புலி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதை தொடர்ந்து விஷால் அடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்திற்குள் முடிந்து விடுமாம். இதனை தொடர்ந்து முத்தையா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால்! இது தவிர லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி-2’ படத்திலும் நடிக்க இருக்கிறார் விஷால்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;