திரைக்கதை வெற்றிமாறன், வசனம் அட்லி, இயக்கம் ஷங்கர்!

திரைக்கதை வெற்றிமாறன், வசனம் அட்லி, இயக்கம் ஷங்கர்!

செய்திகள் 7-Jul-2015 2:46 PM IST VRC கருத்துக்கள்

‘டார்லிங்’ படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படம் தவிர ஜி.வி.நடிப்பில் ‘பென்சில்’ என்ற படமும் வளர்ந்து வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து தனது நண்பர் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்! இப்படத்தில் ஜி.வி.யுடன் மற்றும் இரண்டு பிரபல இயக்குனர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள். அவர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன்! இன்னொருவர் இயக்குனர் அட்லி! ஜி.வி. நடிப்பில் ஷங்கர் இயக்கும் இப்படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை அமைக்க, அட்லி வசனங்களை எழுதுகிறார். இந்த இரண்டு இயக்குனர்களுடனும் ஜி.வி.பிரகாஷ் ஏற்கெனவே பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;