‘வாலு’ ரிலீசுக்கு மீண்டும் சிக்கலா?

‘வாலு’ ரிலீசுக்கு மீண்டும் சிக்கலா?

செய்திகள் 7-Jul-2015 1:11 PM IST VRC கருத்துக்கள்

சிம்பு நடிப்பில் வருகிற 17-ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘வாலு’ படத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விஜய்சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தை ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்ரவர்த்தி தயாரித்துள்ளார். ஏற்கெனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு அந்த தேதிகளில் ரிலீசாகாமல் தள்ளிப்போன ‘வாலு’ படத்தை, டி.ராஜேந்தரின் ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ இம்மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறது.

இந்நிலையில் ‘வாலு’ படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரி ‘மேஜிக் ரேஸ்’ என்ற நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ‘‘தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநில வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்திற்கு ரூபாய் 10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்தார்கள். அதனை மீறி தற்போது வேறு ஒரு நபர் மூலமாக வாலு படத்தை வெளியிட முயல்கிறார்கள். எனவே எங்களை தவிர வேறு நபர் மூலமாக ‘வாலு’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’ என்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரனை நாளை நடைபெறுகிறது. இதனால் ‘வாலு’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - அஸ்வின் தாத்தா முன்னோட்டம் டீசர்


;