கல்லூரி மாணவர்களின் ‘மய்யம்’

கல்லூரி மாணவர்களின் ‘மய்யம்’

செய்திகள் 7-Jul-2015 11:51 AM IST VRC கருத்துக்கள்

பிரபல ஓவியர் ஸ்ரீதர். இவர் ‘மய்யம்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் சாதாரண படம் இல்லை என்கிறார்கள்! இந்திய சினிமாவிலேயே புதிய முயற்சியாம்! கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியரை தேர்வு செய்து அவர்களின் திறமைக்கும், ஆசைக்கும் வாய்ப்பு கொடுத்து உருவாக்கும் படம்.

இந்த படத்தை இயக்கும் ஆதித்யா பாஸ்கர்,. இசை அமைக்கும் கே.ஆர். (ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி மகன்), ஒளிப்பதிவு செய்யும் ஃப்ரான்ஸ் ஹுசைன், ஆடை வடிவமைப்பாளர் வருணா ஸ்ரீதர், படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் ஹாஷிம் ஜெயின், நவீன் சஞ்சய், குமரன் தங்கராஜன், ஜெய்குஹானி, முருகானந்தம், பூஜாதேவரியா,சுகாசினி குமரன் என பெரும்பாலானோரும் கல்லூரி மாணவர்களே! இவருடன் ‘ரோபோ’ சங்கரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பங்கேற்று பணியாற்றி வரும் பெரும்பாலானோரும் இதுவரை எந்த சினிமா படப்பிடிப்பு கூட பார்த்த்தில்லையாம்!

‘‘வங்கிக் கொள்ளை பற்றிய படம் இது. ஏ.டி.எம்.மையங்களில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியா முழுக்க ஆறாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த படம் அது குறித்துதான் பேசப் போகிறது’’ என்கிறார் இப்படத்தை இயக்கும் ஆதித்யா பாஸ்கரன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;