‘காக்கா முட்டை’ இயக்குனருக்கு கே.பாலசந்தர் விருது!

‘காக்கா முட்டை’ இயக்குனருக்கு கே.பாலசந்தர் விருது!

செய்திகள் 7-Jul-2015 10:34 AM IST VRC கருத்துக்கள்

மறைந்த இயக்குனர் சிகரம் பத்மஸ்ரீ கே.பாலசந்தர் பெயரில் அவருடைய பிறந்த தினமான ஜூலை 9-ஆம் தேதி ஒரு அறக்கட்டளையை துவக்க இருக்கிறார் அவருடைய சீடரும், நடிகருமான கம்லஹாசன். இயக்குனர் சிகரம் நடித்த ‘உத்தம வில்லன்’ திரைப்படம் அன்றைய தினம் காலையில் திரையிடப்படுகிறது. அதனை தொடர்ந்து கலந்துரையாடல்கள், வெள்ளித்திரை, சின்னத்திரை, நாடகம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. மாலை 6 மணி அளவில் கே.பி.யை பற்றி கவிஞர் வைரமுத்து எழுதி, ரமேஷ் விநாயகம் இசையமைத்த பிரத்தியேக பாடல் ஒன்று வெளியிடப்படுகிறது.

அதனை தொடர்ந்து கே.பாலசந்தர் அறக்கட்டளையினை கமல்ஹாசன் துவக்கவிருக்கிறார். அறக்கட்டளையின் சார்பாக கே.பாலசந்தர் சாதனை புரிந்த துறைகளான நாடகம், வெள்ளித்திரை, சின்னத்திரை ஆகிய மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.சரத்குமார் மற்றும் திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தலைமையிலான நடுவர் குழு கீழ்கண்ட கலைஞ்ரகளை தேர்வு செய்துள்ளனர்.

கே.பாலசந்தர் நாடக விருது : மூத்த கலைஞர் காத்தாடி ராம்மூர்த்தி
கே.பாலசந்தர் திரை விருது : மணிகண்டன், இயக்குனர் (காக்கா முட்டை)
கே.பாலசந்தர் சின்னத்திரை விருது (தயரிப்பாளர்) : இயக்குனர் திருமுருகன்

இவ்விழாவில் நடிக நடிகையர்கள் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் கலந்து கோள்ளவிருக்கிறார்கள். இவ்விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை – திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடக்கவிருக்கிறது. இதனை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் புஷ்பா கந்தசாமி மற்றும் இயக்குனர் வசந்த் சாய் அறிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடி - டிரைலர்


;