ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த ஹீரோ விஜய்யா? அஜித்தா?

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த ஹீரோ விஜய்யா? அஜித்தா?

செய்திகள் 7-Jul-2015 10:05 AM IST Chandru கருத்துக்கள்

சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிக்கும் ‘அகிரா’ ஹிந்தி படத்தில் தற்போது பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தில் இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகை ராய் லக்ஷ்மி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் வேலைகள் விரைவில் முடிவடையவிருக்கின்றன. இதனால் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் யாருடன் என்ற கேள்வி தற்போது கோலிவுட்டில் சுற்றத் தொடங்கியுள்ளது.

டெக்னாலஜி சம்பந்தப்பட்ட க்ரைம் த்ரில்லர் கதை ஒன்றை ரெடியாக வைத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், அப்படத்திற்காக விஜய், அஜித் இருவரையும் அணுகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அட்லி படத்தில் விஜய்யும், ‘வீரம்’ சிவா படத்தில் அஜித்தும் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களும் முடிவதற்கு எப்படியும் இந்த வருட டிசம்பர் ஆகிவிடும். இருந்தபோதிலும் அதற்கு முன்பாகவே ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;