‘குப்ப கதை’க்காக 20 நாட்கள் சேரியில் வாழ்ந்த மனீஷா!

‘குப்ப கதை’க்காக 20 நாட்கள் சேரியில் வாழ்ந்த மனீஷா!

செய்திகள் 7-Jul-2015 9:49 AM IST Chandru கருத்துக்கள்

‘வழக்கு எண் 18/9’ படத்தில் மாடர்ன் ஸ்கூல் கேர்ளாக அறிமுகமான மனீஷா யாதவுக்கு அதன்பிறகு வெளிவந்த படங்களான ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கௌப்பணும் பாண்டியா ஆகியவை வெற்றிப்படமாக அமையவில்லை. இதனால் தற்போது ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்திருக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் கவர்ச்சிக்குத் தாவிவிட்டார் மனீஷா. ‘லிப் லாக்’ வரை எல்லா விஷயங்களுக்கும் இப்படத்தில் ‘டபுள் ஓகே’ சொன்ன மனீஷா, இப்போது நடன இயக்குனர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘ஒரு குப்ப கதை’ படத்தில் கவர்ச்சிக்கு குட்பை சொல்லிவிட்டு வித்தியாசமான ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தில் மனீஷா யாதவ்விற்கு சேரிப் பெண் வேடமாம். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக சென்னை மெரீனா கடற்கரைக்கு அருகிலுள்ள சேரிப் பகுதியில் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கேயே தங்கியிருந்து சேரிவாழ் மக்களுடன் பழகினாராம் மனீஷா. இப்படத்தின் கேரக்டருக்கு தனக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ‘ஒரு குப்ப கதை’யின் நாயகி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

த்ரிஷா இல்லனா நயன்தாரா - முத்தம் கொடுத்த பாடல் வீடியோ


;