மோகன் ராஜா ஆனார் ‘ஜெயம்’ ராஜா!

மோகன் ராஜா ஆனார் ‘ஜெயம்’ ராஜா!

செய்திகள் 6-Jul-2015 2:36 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘வேலாயுதம்’ உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய ‘ஜெயம்’ ராஜா தற்போது இயக்கி வரும் படம் ‘தனி ஒருவன்’. ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இப்படத்தில் ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா ஜோடியாக நடிக்க, அரவிந்த் சாமி மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறார். ‘ஜெயம்’ ராஜாவும் ‘ஜெயம்’ ரவியும் இணையும் ஆறாவது படம் இது. ‘தனி ஒருவன்’ படத்திலிருந்து ‘ஜெயம்’ ராஜா, தனது பெயரை மோகன் ராஜா என்று மாற்றியுள்ளார்.

நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை வித்தியாசமான கோணத்தில் சொல்லும் படமாம் ‘தனி ஒருவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு டெஹரடூன், மசூரி, கோவா, பேங்காங் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;