இசைக்கு இன்னொரு இரட்டையர்கள்!

இசைக்கு இன்னொரு இரட்டையர்கள்!

செய்திகள் 6-Jul-2015 1:22 PM IST VRC கருத்துக்கள்

‘ரேடியன்ஸ் மீடியா’ சார்பில் வருண் மணியன் வெளியிட, Film Department நிறுவனம் சார்பில் சுஷாந்த் பிரசாத் தயாரிக்கும் படம் ‘புகழ்’. இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் மணிமாறன் இயக்கி வரும் இப்படத்தில் ஜெய், சுரபி ஜோடியாக நடிக்க, விவேக், மெர்வின் இரட்டையர் இசை அமைக்கின்றனர். இப்படத்தின் இசையை சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். ‘வடகறி’ படத்தின் மூலம் இசை அமைப்பாளர்களாக அறிமுகமான விவேக், மெர்வின் ‘புகழ்’ படத்திற்கு இசையமைத்தது குறித்து பேசும்போது,

‘‘விழியில் வீழுந்தவளோ…’ என்ற டூயட் பாடலை ஹரிஹரன் சார், சித்ரா மேடம் இணைந்து பாடியது இனிமையாய் இருந்தது. இருவரும் எங்களை புதியவர்கள் என்று கருதாமல் சக கலைஞர்கள் போல் நடத்தினார்கள். இந்த படத்திற்காக நா.முத்துகுமார் எழுதிய ‘நீயே…’ என்ற பாடலை ‘தும் ஹி ஹோ’ புகழ் அர்ஜித் சிங்கை பாட வைத்துள்ளோம். அவரை ‘வடகறி’ படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சுக்குள்ள நீ…’ பாடலுக்காகவே அணுகினோம். அப்போது அவர் வேறு மொழியில் பாடுவதற்கு தயங்கினார். எனினும், அவரை தமிழில் பாட வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்படம் ஆரம்பித்தவுடன் ‘நீயே…’ பாடலை பாட வைக்க மீண்டும் அணுகினோம். எங்களது முயற்சிக்கு பலன் கிடைத்தது. மறுக்காமல் பாடி தந்தார். தமிழில் அர்ஜித் சிங்கை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்’’ என்றனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பார்ட்டி Animals Gang - 2


;