முத்த சர்ச்சை! விளக்கம் தந்த ஜி.வி.!

முத்த சர்ச்சை! விளக்கம் தந்த ஜி.வி.!

செய்திகள் 6-Jul-2015 12:10 PM IST VRC கருத்துக்கள்

‘டார்லிங்’ படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஆனந்தி, மனிஷா யாதவ், வி.டி.வி.கணேஷ், சிம்ரன் ‘ரோபோ’ சங்கர் முதலானோர் நடிக்க நட்புக்காக ஆர்யா, ப்ரியா ஆனந்த், யூகி சேது ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. அப்போது விழா தொகுப்பாளினி ஜி.வி.பிரகாஷ் குமாரிடம் இப்படத்தில் வரும் ஒரு முத்தக்காட்சி எடுக்கும்போது 36 ’டேக்’குகள் வாங்கியதாக செய்திகள் வந்திருக்கிறதே?’ என்று கேட்க, அதற்கு பதிலளித்த ஜி.வி. பிரகாஷ் ‘‘அந்த முத்தக் காட்சிக்கும், அவ்வளவு ‘டேக்’குக்கும் நான் பொறுப்பல்ல, அதை நீங்கள் இயக்குனரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்’’ என்று நைசாக நழுவினார். இதனை தொடர்ந்து பேசிய இயக்குனர் அதிக் ரவிச்சந்திரன், ‘‘அந்த முத்தக்காட்சி எடுக்கும்போது கிட்டத்தட்ட36 ‘டேக்’குகள் வாங்கியது உண்மை தான்! ஆனால் முத்தம் கொடுப்பது மாதிரி எடுக்கதான் 36 டேக் வாங்கியது என்பதில் உண்மையில்லை! அந்த முத்தக் காட்சியுடன் ஒட்டி வரும் சில காட்சிகளையும் சேர்த்து எடுக்கத்தான் அவ்வளவு ‘டேக்’குகள் வாங்கியது’’ என்று விளக்கம் கொடுத்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;