ஜப்பானில் பிரசாந்தின் ‘சாஹசம்’

ஜப்பானில் பிரசாந்தின் ‘சாஹசம்’

செய்திகள் 6-Jul-2015 9:50 AM IST Chandru கருத்துக்கள்

நடிகர் தியாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கும் ‘சாஹசம்’ படத்தில் அவரது மகன் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் அமண்டா நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். பிரபல ஹிந்தி நடிகை நர்கீஸ் பக்ரி ஒரு பாடலுக்கு பிரசாந்துடன் நடனமாடியிருக்கிறார். இவர்களுடன் நாசர், தம்பி ராமையா, சோனு சூட், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர், அபி சரவணன், துளசி, தேவதர்ஷினி, லீமா பாபு, மலேசியா அபிதா, நளினி, சின்னி ஜெயந்த், பெசன்ட் நகர் ரவி, சுவாமி நாதன், லண்டன் இந்து, பிரம்மாஜி, சாய்பிரஷாந்த், ஹேமா, ராவ்ரமேஷ், கோட்டா சீனிவாசராவ், ரியாஸ்கான், கிருஷ்ணவம்சி, மிப்பு, ஹலோதிவி சுரேஷ், ராஜேந்திரநாத், என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்காக சமீபத்தில் ‘ஆங்கிரி பேர்ட் என்ற பாடல் ஜப்பானில் 8 நாட்கள் நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட ஜப்பானிய நடன கலைஞர்கள் கலந்து கொண்டு பிரஷாந்த், அமண்டாவுடன் சேர்ந்து நடனமாடும் காட்சிகளை காயத்ரி ரகுராம் நேர்த்தியாக படமாக்கினார். இந்த பாடலை மோஹித் சவுகான் பாடியுள்ளார். தமன் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘சாஹசம்’ படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;