‘தல’ அஜித்துடன் இத்தாலிக்குப் பறந்த ஸ்ருதிஹாசன்!

‘தல’ அஜித்துடன் இத்தாலிக்குப் பறந்த ஸ்ருதிஹாசன்!

செய்திகள் 6-Jul-2015 8:56 AM IST Chandru கருத்துக்கள்

கிடைத்த சிறு ஓய்வில் தனது அதிநவீன கேமராவால் அப்புக்குட்டியை போட்டோஷூட் செய்து, ஒரே நாளில் அவரை இணையதளமெங்கும் புகழ்பெறச் செய்த அஜித், தற்போது மீண்டும் ‘தல 56’ படத்தின் வேலைகளில் பிஸியாகிவிட்டார். ‘வீரம்’ சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லக்ஷ்மிமேனனும் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையிலுள்ள பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இத்தாலிக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

அஜித், ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நேற்று முதல் படமாக்கப்பட்டு வருகிறதாம். அங்கு பாடல் ஒன்றும் பதிவு செய்யப்படலாம் என்கிறார்கள். இத்தாலி ஷெட்யூல் முடிந்ததும் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;