பாலக்காட்டு மாதவன் – விமர்சனம்

ஜாலியானவன்!

விமர்சனம் 4-Jul-2015 3:59 PM IST Top 10 கருத்துக்கள்

Production : SSS Entertainment
Direction : M.Chandramohan
Staaring : Vivek, Soniya Agarval, Sheela, Manobala
Music : Srikanth Deva
Cinematography : K.S.Selvaraj

‘நான் தான் பாலா’ படத்தை தொடர்ந்து விவேக் கதையின் நாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் இந்த ‘பாலக்காட்டு மாதவன்’ ரசிகர்களை கவருமா?

கதைக்களம்

ஒரே நிறுவனத்தில் பணி புரியும் கணவன், மனைவி - விவேக், சோனியா அகர்வால்! மனைவியை விட அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்பது விவேக்கின் லட்சியம்! இதற்காக இருக்கிற வேலையை விட்டு வேறு வேலை தேடுகிறார்! ஆனால் வேலைக்கு சென்ற இடங்களில் எல்லாம் விவேக் தொடர்ந்து ‘பல்பு’ வாங்குகிறார். இந்நிலையில் முதியோர் இல்லத்தில் இருக்கும் வயோதிக பெண்மணியான ஷீலாவை தத்தெடுத்து பராமரித்தால் அவரது வங்கி கணக்கில் இருக்கும் 30 லட்சத்திற்கான வட்டிப் பணம் 25 ஆயிரம் ரூபாய் தனக்கு சம்பளமாக கிடைக்கும் என்று ஷீலாவை தத்தெடுத்து வீட்டுக்கு அழைத்து வருகிறார். வந்த இடத்தில் ஷீலா, மாமியார் போன்று அதிகார தோரணையில் நடந்துகொள்ள, அவருக்கும் சோனியா அகர்வாலுக்கும் இடையில் மோதல்கள் உருவாகிறது! மனைவிக்கும், தத்து தாய்க்கும் இடையில் விவேக் மாட்டிக்கொண்டு முழிக்க, கடைசியில் அவர்களிடமிருந்து விவேக் எப்படி தப்பிக்கிறார்? விவேக்கின் லட்சியம் நிறைவேறியதா என்பதற்கு விடை தரும் படமே ‘பாலக்காட்டு மாதவன்’.

படம் பற்றிய அலசல்

வயோதிக பெற்றோர்களை தங்களது சுயநலத்திற்காக முதியோர் இல்லத்தில் சேர்க்கும் இன்றைய மோசமான பழக்கத்தை இளைய தலைமுறையினர் கைவிட வேண்டும் என்ற நல்ல ஒரு கருத்தை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் சந்திரமோகன். அதற்காக அவருக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்! இந்த கதைக்கு விவேக்கை தவிர்த்து வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு, இப்படத்தில் விவேக்கின் பாத்திரப் படைப்பும், நடிப்பும் கனகச்சிதமாக அமைந்துள்ளது. ஆர்மபத்தில் கொஞ்சம் ஸ்லோவாக பயணிக்கும் திரைக்கதை, விவேக் ஷீலாவை தத்தெடுத்து வீட்டுக்கு அழைத்து வந்ததும் சூடு பிடிக்கிறது. ஒரு சில இடங்களில் ஏற்கெனவே நாம் பார்த்து பழக்கப்பட்ட சில காமெடி காட்சிகள், அதிகபடியான லாஜிக் மீறல்கள் என படம் கொஞ்சம் சோர்வடைய வைத்தாலும், பொழுதுபோக்குக்கு ஏற்ற படமாக ‘பாலக்காட்டு மாதவன்’ அமைதுள்ளது. கலகலப்பான் கதை பயணத்திற்கு ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும், கே.எஸ்.செல்வராஜின் ஒளிப்பதிவும் கை கொடுத்துள்ளது.

கலைஞர்களின் பங்களிப்பு

‘நான் தான் பாலா’ படத்தில் சீரியஸான ஒரு கேரக்டரில் நடித்த விவேக் இப்படத்தில் தனக்கு ஏற்ற மாதிரி ஒரு கேரக்டரை தேர்வு செய்து காமெடியில் கலக்கியிருக்கிறார். பக்கத்து வீட்டு மாமியுடன் ‘டபுள்’ மீனிங்கில் பேசுவது, சோனியா அகர்வாலிடம் ரொமான்ஸ் செய்வது, ஷீலாவிடம் மாட்டி முழிப்பது என்று படம் முழுக்க விவேக் ராஜ்ஜியம் தான்! பிராமணப் பெண்ணாக வரும் சோனியா அகர்வால், விவேக்கை வார்த்தைகளால் வறுத்தெடுப்பது, ஷீலாவின் அடாவடித்தனங்கள் தாங்க முடியாமல் அவரை துரத்த முயற்சிப்பது என படம் முழுக்க தனது ஸ்டைலில் கலக்கியிருக்கிறார். சாப்பாடு ராணியாக வரும் ஷீலா, விவேக்கை படுத்தி எடுக்கும் காட்சிகள், ஷீலாவை தத்தெடுக்க வரும் மொட்டை ராஜேந்திரன் மற்றும் கம்பெனி முதலாளியாக வரும் மனோபாலா, மாமியாக வரும் ஆர்த்தி ஆகியோரின் அலப்பறைகள் எல்லாம் ஜாலி ரகம் தான்!

பலம்

1. குடும்பத்துடன் பார்க்க கூடிய ஜாலியான திரைக்கதை
2. ஹீரோயிசத்தை நம்பாமல் கதையுடன் பயணித்திருக்கும் விவேக்கின் நடிப்பு
3. இசையும், ஒளிப்பதிவும்

பலவீனம்

1.ஸ்லோவாக பயணிக்கும் முதல் பாதி திரைக்கதையும், ஏற்கெனவே நாம் பார்த்து பழகிய சில காமெடி காட்சிகளும்
2. சுவாரஸ்யமில்லாத பாடல்கள் மற்றும் லாஜிக்கை பற்றி கவலைப்படாதது

மொத்தத்தில்…

எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரண்டு மணிநேரம் பொழுதை கழிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற படம் ‘பாலக்காட்டு மாதவன்’!

ஒருவரி பஞ்ச் : ஜாலியானவன்!

ரேட்டிங் : 4/10

(Palakkattu Madhavan Review, Palakkattu Madhavan Movie Review, Palakkattu Madhavan Tamil Movie Review)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - டீசர்


;