‘பேபி’யை தொடர்ந்து டெய்சி!

‘பேபி’யை தொடர்ந்து டெய்சி!

செய்திகள் 4-Jul-2015 1:12 PM IST VRC கருத்துக்கள்

‘ஜூனா பிக்சர்ஸ் பிரைவட் லிமிடெட்’ சார்பில் என். ஷண்முகசுந்தரம், கே.முகமது யாசின் தயாரிக்கும் டம் 'டெய்சி'. புதுமுக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கும் இப்படத்தில் தீபக் பரமேஷ், ஜாக்லின் பிரகாஷ், குணாளன் மோகன், மோர்ணா அனிதா ரெட்டி, 'மைம்' கோபி முதலானோர் நடிக்கின்றனர். இப்படம் உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து சென்டிமென்ட், திகில் படமாக உருவாகி வருகிறது. இதில் டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் மையப்படுத்தி இருக்கிறார்களாம்! சமீபத்திய திகில், பேய் படங்களிலிருந்து இப்பாம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்கிறர் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.

C.H.மோகன்ஜியின் கலை அமைப்பில், ஹரிஹரனின் படத்தொகுப்பில், அறிமுக ஒளிப்பதிவாளர் மணிஷ் மூர்த்தியின் ஒளிப்பதிவில், புதுமுகம் சிவசரவணன் இசையில் இப்படம் உருவாகி வருகிறது. ‘ டெய்சி’ குறித்து மேலும் இயக்குனர் ஸ்ரீநாத் கூறுபோது,
‘‘ டெய்சி அன்புக்காக ஏங்கி அலையும் ஒரு எட்டு வயது சிறுமியின் ஆவியை பற்றிய கதை. நிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய குடும்பங்ளுக்கு தேவையான கருத்தைக் கொண்ட கதை என்பதால் முழுக்க முழுக்க சென்டிமென்ட் கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம்’’ என்றார்.
சமீபத்தில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் ‘பேபி’ பட கதையும் பாசத்துக்காக ஏங்கும் ஒரு சிறுமியின் கதைதான்! அந்த வரிசையில் மற்றொரு படமாக உருவாகி வருகிறது ‘டெய்சி’

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்தின கத்திரிக்கா - டிரைலர்


;