15-ல் ‘ஜெயம்’ ரவி, நயன்தாராவின் மியூசிக் ட்ரீட்!

15-ல் ‘ஜெயம்’ ரவி, நயன்தாராவின் மியூசிக் ட்ரீட்!

செய்திகள் 4-Jul-2015 12:25 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ராஜா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் ‘தனி ஒருவன்’. ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை தொடர்ந்து இப்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கும் இப்படத்தின் பாடல்களை இம்மாதம் 15 ஆம் தேதி வெளியிட தீர்மானித்துள்ளார்கள். ‘தில்லாலங்கடி’ படத்திற்கு பிறகு ‘ஜெயம்’ ராஜா, ‘ஜெயம்’ ரவி இணையும் படம், நயன்தாரா, ஜெயம் ரவி முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் என பல சிறப்புக்களுடன் உருவாகி வரும் ‘தனி ஒருவன்’ படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் ஏ.ஜி.எஸ்.நிறுவனத்தினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டீசர்


;