ஆகஸ்ட் 2-ல் கை கோர்க்கும் விஜய், விஷால்!

ஆகஸ்ட் 2-ல் கை கோர்க்கும் விஜய், விஷால்!

செய்திகள் 4-Jul-2015 10:40 AM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் முதலானோர் நடித்து வந்த ‘பாயும் புலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதனை தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடகஷன் வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்து வருகிறார். இப்படத்தின் ஆடியோ உரிமையை வி.மியூசிக் நிறுவனம் கைபற்றியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை வருகிற 15-ஆம் தேதியும், முழு ஆடியோவை ஆகஸ்ட் 2-ஆம் தேதியும் வெளியிட தீர்மானித்துள்ளனர். விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் ஆடியோ வெளியீடும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை இதுவரை யாரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை! ‘பாயும் புலி’யின் ஆடியோ ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியாவதை தொடர்ந்து படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;