ஐ, லிங்கா, என்னை அறிந்தால் வரிசையில் ‘புலி’!

ஐ, லிங்கா, என்னை அறிந்தால் வரிசையில் ‘புலி’!

செய்திகள் 4-Jul-2015 10:27 AM IST Chandru கருத்துக்கள்

இதற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தார்கள் ‘இளையதளபதி’ ரசிகர்கள். அஜித் படமும், விக்ரம்&ஷங்கர் கூட்டணி படமும் செய்த சாதனையை தங்கள் தளபதியும் செய்வார் என்ற அவர்களின் ஆசைக்கு தீனி போட்டிருக்கிறார் விஜய். கடந்த 21ஆம் தேதி வெளியான ‘புலி’ டீஸர் 13 நாட்களில் 50 லட்சம் பார்வையிடல்களை எட்டியிருக்கிறது. இதற்கு முன்பு இந்த சாதனையைச் செய்திருப்பது 3 தமிழ்ப் படங்கள் மட்டுமே. ஒன்று ஷங்கரின் ஐ. இப்படத்தின் டீஸர் 1 கோடியே 10 லட்சத்தையும், டிரைலர் 84 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையிடல்களையும் பெற்றிருக்கிறது. அதேபோல் கௌதம், அஜித்தின் படமான ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர் 53 லட்சங்களைத் தாண்டியிருக்கிறது. ரஜினியின் ‘லிங்கா’ டிரைலர் 52 லட்சங்களைத் தாண்டியிருக்கிறது. தற்போது ‘புலி’ டீஸரும் இந்த வரிசையில் இணைந்திருக்கிறது.

‘புலி’ டீஸர் இந்த ஒரு சாதனை மட்டுமின்றி ‘ஐ’ பட டீஸர்/டிரைலர் பெற்ற லைக்குகளையும் முந்தி சாதனை படைத்திருக்கிறது. ‘ஐ’ பட டீஸர் 48 ஆயிரம் லைக்குகளையும், டிரைலர் 53 ஆயிரம் லைக்குகளையும் பெற்றிருந்தது. இதனை முறியடித்து ‘புலி’ டீஸர் 57 ஆயிரம் லைக்குகளைப் பெற்றிருக்கிறது. ‘லைக்’கைப் பொறுத்தவரை ‘என்னை அறிந்தால்’ டிரைலர் 66 ஆயிரம் லைக்குகளையும், டீஸர் 94 ஆயிரம் லைக்குகளையும் பெற்றிருப்பதே அதிகபட்ச சாதனை. இதில் ‘என்னை அறிந்தால்’ டிரைலரின் லைக் சாதனையையும், டீஸர் பெற்றிருக்கும் 53 லட்சம் பார்வையிடல் சாதனையையும், ‘லிங்கா’ டிரைலரின் 52 லட்சம் பார்வையிடல் சாதனையையும் ‘புலி’ டீஸர் முறியடிக்க வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டாளி - டிரைலர்


;