‘36 வயதினிலே’ 50-ஆவது நாள்!

‘36 வயதினிலே’ 50-ஆவது நாள்!

செய்திகள் 3-Jul-2015 4:34 PM IST VRC கருத்துக்கள்

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான படம் ‘36 வயதினிலே’. சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளிவந்த இப்படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்து ஜோதிகாவுக்கு மட்டுமல்லாமல் ‘2டி’ நிறுவனத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது வித்தியாசமான கதை அமைபில் சமூகத்திற்கு, குறிப்பாக பெண்களுக்கு சொல்லப்பட்ட நல்ல ஒரு கருத்தும், அதில் ஜோதிகாவின் சிறப்பான நடிப்பும், இப்படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ் உட்பட படத்தில் பங்காற்றிய அனைவரின் சிறப்பான பங்களிப்பும் தான்! ‘36 வயதினிலே’ வெளியாகி இன்று 50 ஆவது நாளை தொட்டு இன்னமும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இது சூர்யா, ஜோதிகா உட்பட ‘36 வயதினிலே’ படக்குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;