‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதனிடம் ‘உப்புக்கருவாடு!

‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதனிடம் ‘உப்புக்கருவாடு!

செய்திகள் 2-Jul-2015 3:38 PM IST VRC கருத்துக்கள்

‘பயணம்’ படத்தை தொடர்ந்து ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘உப்பு கருவாடு’. ராதாமோகனின் ‘நைட் ஷோ பிக்சர்ஸ்’ நிறுவனமும் ராம்ஜி நரசிம்மனின் ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கருணாகரன், நந்திதா முக்கிய கேரக்டர்களில் நடிக்க, எம்.எஸ். பாஸ்கர், மயில்சாமி, குமாரவேல், சாம்ஸ், நாராயணன், புதுமுகம் ரக்ஷிதா, சரவணன், 'டவுட்' செந்தில் உட்பட பலர் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிபதிவு செய்கிறார். பிரசித்தி பெற்ற கிட்டார் இசை கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ராதாமோகன் இயக்கும் படம் என்றால் அப்படத்தின் மீது ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அதைப்போல ‘உப்புகருவாடு’ படம் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெளியிடும் உரிமையை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. இந்நிறுவனம் விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்யவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டிரைலர்


;