பாலிவுட்டில் அறிமுகமாகும் சஞ்சனா சிங்!

பாலிவுட்டில் அறிமுகமாகும் சஞ்சனா சிங்!

செய்திகள் 2-Jul-2015 12:36 PM IST VRC கருத்துக்கள்

‘ரேனிகுண்டா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ‘ரகளபுரம்’, ‘மீகாமன்’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சஞ்சனா சிங். இவர் முதன் முதலாக ‘தோடா லுப்த், தோடா இஷ்க்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்துள்ளார். சச்சின் குப்தா இயக்கியுள்ள இப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி காமெடி நடிகரான ராஜ்பால் யாதவ் முக்கிய கேரக்டரில் நடிக்க, அவருடன் சஞ்சனா சிங் நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் 10-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இந்த படம் சம்பந்தமான புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது சஞ்சனா சிங் பேசும்போது,

‘‘மும்பையில் இருந்து வந்து ‘ரேனிகுண்டா’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானேன். ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன்! அதனால் என்னை ‘ஐட்டம் கேர்ள்’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள்! பாலிவுட்டில் பல முன்னணி ஹீரோயின்கள் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள்! அவர்களை யாரும் ஐட்டம் கேர்ள் என்று அழைப்பதில்லை! நான் ஒரு நடிகை! என் தொழில் நடிப்பது தான்! ஒரு நடிகை எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில நடிக்க வேண்டும்! அதை தான் நானும் செய்கிறேன்! ஒரு பாடலுக்கு ஆடுவதுடன் நல்ல கேரக்டர்களிலும் நடித்து வருகிறேன். ஆனால் அதை யாரும் பெரிசாக எடுத்துக் கொள்வதில்லை! இனி என்னை யாரும் ‘ஐட்டம் கேர்ள்’ என்று அழைக்காதீர்கள்! ‘தோடா லுப்த் தோடா இஷ்க்’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறேன். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. இந்த படம் மூலம் பாலிவுட்டிலும் எனக்கு ஒரு இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். எப்போதும் போல எனக்கு உங்களது ஆதரவும், ஒத்துழைப்பும் வேண்டும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அலோன் - டிரைலர்


;