ஐரோப்பா செல்லும் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா!

ஐரோப்பா செல்லும் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா!

செய்திகள் 2-Jul-2015 11:15 AM IST VRC கருத்துக்கள்

‘பி.வி.பி. சினிமா’ நிறுவனம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா முதலானோர் நடித்து வருகிறார்கள். வம்சி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏராளமான பொருட் செலவில் தயாராகி வரும் இப்படத்திற்கு பி.எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் ஒரு சில காட்சிகளை ஐரோப்பா நாட்டில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா ஆகியோர் அடங்கிய படக்குழுவினர் விரைவில் ஐரோப்பா செல்லவிருக்கின்றனர்.

இதுவரை எந்த தென்னிந்திய படக் குழுவினரும் சென்றிராத செர்பியா நாட்டின் தலை நகரமான Belgrade நகரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. பெல்கிரேட் நகரத்துக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்திலும், லயோன் நகரத்திலும் ஷூட்டிங் நடைபெறவிருக்கிறது. அங்கு மொத்தம் 30 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க உள்ளதாம். இத்துடன் இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து விடும் என்கிறார்கள். இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;