‘புலி’ விஜய் ஸ்டைலில் ‘பாயும் புலி’ விஷால்!

‘புலி’ விஜய் ஸ்டைலில் ‘பாயும் புலி’ விஷால்!

செய்திகள் 2-Jul-2015 10:58 AM IST Chandru கருத்துக்கள்

நடிகர் விஷாலுக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ‘இளையதளபதி’ விஜய்யும் ஒருவர். தற்போது விஜய் ‘புலி’ படத்தில் பிஸியாக இருக்க, விஷாலோ ‘பாயும் புலி’ படத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இந்த வருட பொங்கல் சமயத்தில் ‘புலி’ டீமில் பணிபுரிந்த அனைத்து டெக்னீஷியன்களுக்கும் தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார் விஜய்.

தற்போது நடிகர் விஷாலும் இதே பாணியில், ‘பாயும் புலி’ படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கியிருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அதனை முன்னிட்டு 300 தங்க நாணயங்களை டெக்னீஷியன்களுக்கு பரிசாக விஷால் வழங்கியுள்ளாராம்.

‘புலி’ படம் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ‘பாயும் புலி’ அதற்கு முன்பாகவே ரிலீஸாகும் என்று கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;