‘பரதேசி’ பட பாணியில் அதர்வா மீண்டும் நடிக்கும் படம்!

‘பரதேசி’ பட பாணியில் அதர்வா மீண்டும் நடிக்கும் படம்!

செய்திகள் 2-Jul-2015 10:50 AM IST VRC கருத்துக்கள்

‘ஈட்டி’, ‘சண்டி வீரன்’, ‘கணிதன்’ ஆகிய படங்களில் நடித்து வரும் அதர்வா அடுத்து ‘குங்குமப்பூவும், கொஞ்சும் புறாவும்’ படத்தை இயக்கிய ராஜ்மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதர்வா நடித்த ‘பரதேசி’ பட பாணியில் இப்படமும் ஒரு பீரியட் ஃபிலிமாக உருவாக இருக்கிறதாம்! இப்படத்தின் கதை 1957 காலகட்டத்திலிருந்து துவங்குகிற மாதிரி அமைக்கப்பட்டுளளதாம்! சமூகத்தில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விஷயங்களுக்காக போராடும் மலை வாழ் மக்களின் கதையை சொல்லும் இப்படத்தின் படப்பிடிப்பு மலை பிரதேசங்களான தேனி, கொடைக்கானல், மறையூர் ஆகிய இடங்களில் விரைவில் நடைபெறவிருக்கிறது. இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்பொது நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜெமினி கணேசனும்சுருளி ராஜனும் - டிரைலர்


;