சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட படம்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட படம்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 1-Jul-2015 2:13 PM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி.ராஜா. சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் புரொமோஷன், வியாபார விஷயங்கள் முதலானவற்றை ஆர்.டி.ராஜா தான் கவனித்து வருகிறார். இந்நிலையில் ஆர்.டி.ராஜா ‘24 AM STUDIOS’ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த கம்பெனியின் முதல் தயாரிப்பாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா! இந்த படத்தை அட்லியின் அசிஸ்டென்ட் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்ற, சவுன்ட் டிசைனிங் பொறுப்பை ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி கவனிக்கிறார். படத்தொகுப்பை ஆன்டனி எல்.ரூபன் கவனிக்கிறார். ஷங்கரின் ‘ஐ’ படத்தில் பங்குபெற்ற ‘வீடா ஒர்க் ‌ஷாப்’ நிறுவனம் இந்த படத்தின் ஒப்பனை விஷயங்களை கவனிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குமாம்!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினி முருகன்’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;